search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி கடத்தல்"

    • மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    நந்திவரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் நந்திவரம் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மினி டெம்போ லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அந்த மினி லாரியில் அரசு சாக்கு குப்பையில் தலா 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    அதில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 38) என்பதும், இவர் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி.சாலை ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடை மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 2,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி டெம்போ லாரியும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசி கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • லாரி பறிமுதல்
    • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த தட் டாங்குட்டை ஏரிக்கரை பகுதியில் ரேஷன் அரி சியுடன் மினி லாரி ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இத னைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தட்டாங்குட்டை ஏரி பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ஏரிக்கரை பகுதியில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது லாரியில் 40-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து போலீசார் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண் ணன் உத்தரவின் பேரில் பிடிபட்ட ரேசன் அரிசி மற்றும் லாரியை மேல் நடவடிக்கையாக வேலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
    • இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த ரேஷன் அரிசியை வீடு, வீடாக சென்று வாங்கியவர்களிடமிருந்து 225 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளர் முருகேசன், ஜீப் ஓட்டுநர் சுப்பிரமணி ஆகியோர் கிருஷ்ணகிரி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி என்ற இடத்தில் இருந்து கரிக்கல்நத்தம் - மாங்குட்டை ஏரிக்கு செல்லும் சாலையில் ரோந்து சென்றனர்.

    அபபோது அங்கு இருசக்கர வாகனத்தில், 5 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் 225 கிலோ ரேஷன் அரிசி, மின்னணு எடை தராசுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன், தேவர்குந்தாணி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமன் என்பதும், அவர்கள் இருவரும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசை வாங்கி, மொத்தமாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

    இந்த விசாரணையின் போது, அவர்கள் இருவரும் அரசி, இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். 

    • டிரைவர் கைது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வடக்கு மண்டல குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட் டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரேசன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை - சித்தூர் ரோடு காரை கூட்ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட் டோவை மறித்து, சோதனை செய்ததில், தலா 500 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

    விசாரணை யில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆற்காடு வேல்முருகேசன் தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 34) என்பதும், பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்று வந்தது தெரிந்தது.

    அதைத்தொ டர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்ப டைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மருது பாண் டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை மார்க்க மாக வேகமாக ஒரு வேன் சென்றது.அந்த வேனில் 5 பயணி கள் இருந்தனர். ஜானகிபுரம் மேம்பாலத்தில் இருந்து தரை இறங்கிய ேபாது அந்த வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அப்போது அதில் இருந்த டிரைவர் மற்றும் 5 பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சந்தேகம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி அந்த வேனை சோதனையிட்டார்அதில் 1¼ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அதனை உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவில் ஒப்படைத்தனர். என்றாலும் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதனை கடத்தி வந்தவர்கள் யார்? தப்பி ஓடியவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    • பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஊட்டி

    பந்தலூர் தாலுகா பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வந்தது.

    இந்த கடத்தல் மற்றும் மணல் கடத்தல்களை தடுக்கவும் பாட்டவயல், நம்பியார்குன்னு, மதுவந்தால், தாளூர், கக்குண்டி, பூலக்குன்று, கோட்டூர், மணல்வயல், சோலாடி, நாடுகாணி உள்பட பல பகுதிகளில் போலீஸ் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு கடத்தல்களை தடுப்பது மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பந்தலூர் பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு காரை போலீசார் நிறுத்திய போது காரை ஓட்டிவந்த ஒருவர் காரைநிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். போலீசார் காரை சோதனை போட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • அரிசி கடத்தலில் ஈடுபட்ட 113 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    அவனியாபுரம்

    மதுரை பெருங்குடி, வில்லாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பொதுமக்கள் நலன் சார்ந்து மிக நேரடியாக செயல்படக்கூடிய துறையாகும். முதலமைச்சர் நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தரமானதாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நியாய விலை கடை களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்து595 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 1300 க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாவட்டத்திற்கு குறைந்த பட்சம் 75 நியாயவிலைக் கடைகளை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரையில் தோப்பூர் பகுதியில் புதிய உணவுப் பொருள் சேமிப்பு கிட்டங்கு கட்டப்பட்டு வருகிறது. அரிசி கடத்தல் போன்ற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 ஆயிரத்து 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 113 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இத்தகைய குற்ற சம்பவங்களுக்கு உறு துணையாக இருக்கும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை, நிலையூர் மற்றும் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளிலும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின் போது இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை) உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ராமநாதபுரம் அருகே வேனில் கடத்திய 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே கடலோர பாதுகாப்பு குழுமபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் திருப்புல்லாணி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வாகன சோதனை நடத்தனர்.

    அப்போது அந்த வழியாக ரெகுநாதபுரத்தில் இருந்து இ.சி.ஆர். சாலையில் செல்ல முயன்ற ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். அவரை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர் உத்திரகோசமங்கை சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.

    அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 50 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அரிசி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளையும், வாகன த்தையும் ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர்.
    • ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலமாக ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரைட் மேரி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சிவகாசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியை மறித்தனர். போலீசாரை கண்டதும் லாரியில் இருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சுதாரித்து கொண்ட போலீசார் தப்பி ஓட முயன்ற லாரி டிரைவரை விரட்டி பிடித்தனர்.

    தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை மேற்கொண்ட போது தலா 50 கிலோ கொண்ட 61 கிலோ மூட்டை ரேசன் அரிசிகள் கடத்தி செல்வது தெரிய வந்தது. மொத்தம் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு கடத்துவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து ரேசன் அரிசி, அதனை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசியை கடத்திய லாரி டிரைவர் அவனியாபுரத்தை சேர்ந்த பூவலிங்கம் (வயது 32) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய முனிச்சாலையை சேர்ந்த பாண்டித்துரை (29) என்பவரை தேடி வருகின்றனர்.

    ×